மெகபூபா முப்தி தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு


மெகபூபா முப்தி தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
x
தினத்தந்தி 14 Oct 2020 10:32 AM IST (Updated: 14 Oct 2020 10:32 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான மெஹபூபா முப்தி கடந்த 13 மாதங்களுக்குப் பிறகு தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் இருந்த மெகபூபா முப்தி விடுவிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

மெஹபூபா முப்தி கடந்த 13 மாதங்களுக்குப் பிறகு தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பதை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். காஷ்மீரில் அரசியல் ரீதியாக அடைத்துவைக்கப்பட்டுள்ள பிற தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தன் விடுவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முப்தி நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story