அமேசானின் பண்டிகை கால சிறப்பு விற்பனை: 17-ந் தேதி தொடங்குகிறது


அமேசானின் பண்டிகை கால சிறப்பு விற்பனை: 17-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 15 Oct 2020 1:00 AM IST (Updated: 15 Oct 2020 12:46 AM IST)
t-max-icont-min-icon

அமேசானின் பண்டிகை கால சிறப்பு விற்பனை 17-ந் தேதி தொடங்குகிறது.

சென்னை, 

அமேசானின் பண்டிகை கால சிறப்பு விற்பனை 17-ந் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து அமேசான் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் இந்த ஆண்டில் கொண்டாடப்படும் பண்டிகை சற்று வித்தியாசமாக அமைய உள்ளது. நாடு முழுவதும் அமேசானின் விற்பனையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை அணுகுவதற்கு ஒரு வாய்ப்பை இந்தியாவில் இந்த ஆண்டு கொண்டாடப்படும் பண்டிகைகள் வழங்க உள்ளன. இதன் மூலம் அவர்களது வர்த்தகம் நல்ல வேகத்தை அடையும்.

வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் இந்த பண்டிகை காலத்தில் அவர்கள் வீட்டிற்கே பாதுகாப்பாக சென்று வழங்குவதற்கு அமேசான் தீர்மானித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள், டி.வி., எலக்ட்ரானிக் பொருட்கள், வீடு மற்றும் சமையல் அறை உபகரணங்கள், அழகு சாதன பொருட்கள் உள்பட 900 புதிய தயாரிப்புகளை மிக உயர்ந்த தரத்திலான நிறுவனங்களிடம் இருந்து பெற்று உள்ளோம்.

அக்டோபர் 17-ந் தேதியில் இருந்து விற்பனையாளர்களிடம் இருந்து புதிய, புதிய ஆச்சரியத்தக்க அனுபவங்களுடன் வாடிக்கையாளர்கள் பொருட் களை வாங்கலாம். வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி, சலுகைகளையும் வங்கிகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

எச்.டி.எப்.சி. வங்கி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. விலை குறைந்த செல்போன்கள் முதல் பிரிமீயம் வகையிலான ஸ்மார்ட் போன்களை பெற முடியும். அமேசானின் பிரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 16-ந் தேதி முதல் இந்த வசதியை பெறலாம். சாம்சங், ஒன் பிளஸ், ஆப்பிள், ஓப்போ உள்ளிட்ட பல்வேறு புகழ் பெற்ற நிறுவனங்களின் புதிய தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை சேர்ப்பதற்காக புதிய உள்கட்டமைப்பு வசதிகளையும் அமேசான் செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story