எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி மொழியில் ஆறுதல் கடிதம்: மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு வைகோ கண்டனம்


எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி மொழியில் ஆறுதல் கடிதம்: மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு வைகோ கண்டனம்
x
தினத்தந்தி 15 Oct 2020 1:15 AM IST (Updated: 15 Oct 2020 1:01 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி மொழியில் ஆறுதல் கடிதம் எழுதிய மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, உள்துறை மந்திரி அமித்ஷா, இந்தியில் கடிதம் எழுதி இருக்கின்றார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமை. சகித்துக்கொள்ள முடியாது. ம.தி.மு.க.வின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ‘எனக்கு இந்தி தெரியாது. எனவே உங்கள் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புங்கள் என்று கூறி, அந்தக் கடிதத்தை, எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்’ என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story