பத்தாவது நாளாக தொடர் ஏற்றம்: சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வு; நிப்டி 37 புள்ளிகள் அதிகரிப்பு


பத்தாவது நாளாக தொடர் ஏற்றம்: சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வு; நிப்டி 37 புள்ளிகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2020 8:00 PM GMT (Updated: 14 Oct 2020 7:40 PM GMT)

பத்தாவது நாளாக சென்செக்ஸ் மற்றும் நிப்டியின் புள்ளிகள் தொடர் ஏற்றம் கண்டு வருகிறது.

மும்பை, 

பங்கு வியாபாரம் பத்தாவது நாளாக நேற்று தொடர் ஏற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 37 புள்ளிகள் அதிகரித்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்ட நிலையில், மும்பை பங்குச்சந்தையில் நிதிச்சேவைத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.68 சதவீதம் முன்னேறியது. அடுத்து வங்கித்துறை குறியீட்டு எண் 1.62 சதவீதம் உயர்ந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 17 பங்குகளின் விலை அதிகரித்தது. 13 பங்குகளின் விலை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 169.23 புள்ளிகள் உயர்ந்து 40,794.74 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 40,880.25 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 40,279.55 புள்ளிகளுக்கும் சென்றது.

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 36.55 புள்ளிகள் அதிகரித்து 11,971.05 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,997.20 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,822.15 புள்ளிகளுக்கும் சென்றது.


Next Story