நிறுவனத்தை கைதூக்கிவிடும் நடவடிக்கை: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பிரதமருக்கு நன்றி


நிறுவனத்தை கைதூக்கிவிடும் நடவடிக்கை: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பிரதமருக்கு நன்றி
x
தினத்தந்தி 15 Oct 2020 2:00 AM IST (Updated: 15 Oct 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

நிறுவனத்தை கைதூக்கிவிடும் நடவடிக்கை என்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாநில செயலாளர் சி.கே.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நஷ்டத்திலும், ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க முடியாமல் நிதி நெருக்கடியால் தவிக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை கைத்தூக்கிவிட மத்திய மந்திரிசபை எடுத்திருக்கும் நல்ல முடிவை நன்றியுடன் வரவேற்கிறோம். சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் இடைவிடாத முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது. மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக சங்கம் சார்பில் பிரதமர், தொலைத்தொடர்பு மந்திரி உள்ளிட்ட பலருக்கும் கோரிக்கை மனுக்கள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து துறைகளும், அவற்றின் பொதுத்துறை நிறுவனங்களும் தங்களின் அனைத்து தொலைபேசி தேவைகளுக்கும் அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறவனங்களையே பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என நீண்ட காலம் வற்புறுத்தி வந்துள்ளது. சென்னை ஊழியர்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் கூட இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இப்போது மத்திய மந்திரிசபை கூட்டம் இத்தகைய நல்லதோர் முடிவை எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கு உரியது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறவனம் நிச்சயமாக பெரிதும் பயனடையும். இதற்காக மத்திய அரசுக்கு குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story