சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க டிச.31 வரை காலக்கெடு நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க டிச.31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறையின் மூலம் நிறுவனங்களின் தொழில் உரிமம் 2020-2021 ஆம் நிதியாண்டில், 31.03.2020-க்குள் புதுப்பிக்க வேண்டும்.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தொழில் உரிமத்தை எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் புதுப்பிக்க ஏதுவாக 31.12.2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிறுவனங்கள் தங்களின் தொழில் உரிமத்தை 31.12.2020 வரை எவ்வித தண்டத்தொகையுமின்றி புதுப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்".
Related Tags :
Next Story