மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? - கமல் ஆலோசனை + "||" + Alliance in Assembly election? kamal's MNM party executive committee held discussions today

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? - கமல் ஆலோசனை

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? - கமல் ஆலோசனை
மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாக மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,

மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை பாண்டிபஜார் தனியார் நட்சத்திர விடுதியில் துவங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் நிர்வாக குழுவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்கான இலக்கு மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. 

தேர்தல் நிதியை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள், கட்சியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சிறப்பு கிராம சபை கூட்டத்தை விரைந்து நடத்த வைப்பதற்கான வழிவகை குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது எனக் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல - கமல்ஹாசன்
ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
2. மக்கள் நீதி மய்யத்தின் முதல் தொழிற்சங்கம் தொடக்கம் - கமல்ஹாசனிடம் நிர்வாகிகள் வாழ்த்து
மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் நல அணி சார்பில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதல் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. ஊழலில், உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுப்பதில், மணல் கொள்ளையில் தான் தமிழகம் முதலிடம் -கமல்ஹாசன் தாக்கு
ஊழலில், மானுட உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுப்பதில், மாணவர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகும் மாநிலங்களில், மணல் கொள்ளையில் தமிழகம் முதலிடம். அதை இந்த இடத்தில்தான் சொல்ல வேண்டும்.
4. திமுக வுடன் கூட்டணி சேரப்போவதில்லை - அடித்து கூறும் கமல்ஹாசன்
காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திமுக அதிமுகவுடன் கூட்டணி சேரப்போவதில்லை என உறுதி அளித்து உள்ளார்.
5. ரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்? கமல்ஹாசன் பதில்
ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார்.