நீட் தேர்வு முடிவுகள்- தமிழகத்தில் 57.44% பேர் தேர்ச்சி


நீட் தேர்வு முடிவுகள்- தமிழகத்தில் 57.44% பேர் தேர்ச்சி
x

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு 1.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 99,610 மாணவர்கள் தேர்வெழுதினர்.

சென்னை,

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. தேர்வை எழுத இயலாமல் தவறவிட்ட மாணவா்களுக்கு சிறப்புத் தேர்வு புதன்கிழமை (அக்.14) நடந்தது இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு 1.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 99,610 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில்,  57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 48.57%ஆக இருந்த நிலையில், நடப்பாண்டு 57.44 சதவீதமாக அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் 8-வது இடம் பெற்றார்.  அகில இந்திய அளவில் முதல் 40 இடங்களில் ஸ்ரீஜன் மட்டுமே இடம்பிடித்துள்ளார். மாநில அளவில் மாணவி மோகன பிரபா 2-வது இடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 720 மதிப்பெண்களுடன் ஒடிசா மாணவர் சோயப் முதலிடம் பிடித்துள்ளார்.

Next Story