பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்


பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்
x
தினத்தந்தி 17 Oct 2020 7:51 AM IST (Updated: 17 Oct 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

இன்றைய நிலவரப்படி பாவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.4 அடியாக உள்ளது.

ஈரோடு,

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்ட பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

இன்றைய நிலவரப்படி பாவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.4 அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து தற்போது 1,037 கன அடியாக உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 3,250 கன அடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையில் 28.3 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

Next Story