தியாகிகள் ஓய்வூதியம் கோரிய முதியவரை நீதிமன்றத்தை நாடச் செய்த அரசு அதிகாரிகள்: சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
தியாகிகள் ஓய்வூதியம் கோரிய முதியவரை நீதிமன்றத்தை நாடச் செய்த அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தியாகிகள் ஓய்வூதியம் கோரி 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக வெட்கப்பட வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் தனது இறுதி மூச்சுக்கு முன் சுதந்திரப் போராட்ட வீரர் என அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீதிமன்றத்தை அவர் நாடி இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளது.
தியாகிகள் ஓய்வூதியம் வழங்க கோரி சுதந்திர போராட்ட தியாகி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story