மாநில செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,464 குறைந்தது -வெள்ளியும் கிலோவுக்கு ரூ.400 வீழ்ச்சி + "||" + Gold price falls by Rs 1,464 per Sovereign

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,464 குறைந்தது -வெள்ளியும் கிலோவுக்கு ரூ.400 வீழ்ச்சி

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,464 குறைந்தது -வெள்ளியும் கிலோவுக்கு ரூ.400 வீழ்ச்சி
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,464 குறைந்தது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.400 வீழ்ச்சியடைந்தது.
சென்னை, 

கடந்த 1-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 815-க்கும், ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. இதைதொடர்ந்து தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு நிலையற்ற தன்மை இருந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 863-க்கும், ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 904-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று 183 குறைந்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 680 ஆகவும், ரூ.1,464 குறைந்து பவுன் ரூ.37 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 65 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.65 ஆயிரத்து 800-க்கும் வெள்ளி விற்பனையானது. நேற்று 40 காசு குறைந்து ஒரு கிராம் 65 ரூபாய் 40 காசுக்கும், ரூ.400 குறைந்து ஒரு கிலோ ரூ.65 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.

இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், “கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. பொருளாதார சந்தைகள் மீண்டும் படிப்படியாக திறக்கப்படுவதால், நிறுவனங்களின் மீதான முதலீடுகள் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில் தங்கத்தின் மீது முதலீடு செய்வது குறைந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இது மேலும் குறையுமா? என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்” என்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 152 ரூபாய் குறைந்துள்ளது.
2. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 உயர்வு
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 48க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
4. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.39,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.