மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை முயற்சி + "||" + Student attempts suicide due to low score in NEET

‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை முயற்சி

‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை முயற்சி
செஞ்சியில் ‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜேந்திரா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் ரம்யா(வயது 19). இவர் கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் செஞ்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நீட் தேர்வுக்காக சென்னையில் உள்ள தனியார் மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வு எழுதி இருந்தார். நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியானதில் ரம்யா, குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தார். இதனால் மாணவி ரம்யா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேசாமல் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த கொசு மருந்தை எடுத்து அவர் குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தான், அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவி ரம்யாவிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக - முதலமைச்சர் பழனிசாமி
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் என்றும், ஆதரித்தது திமுக என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2. ‘நீட்’ தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்க உள்ளதாக தகவல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ‘நீட்’ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற கூறுவது ஏன் ? - சென்னை உயர்நீதிமன்றம்
நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற கூறுவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
4. நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 முக்கிய குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை - ஆதார் ஆணையம் கைவிரித்தது
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 முக்கிய குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் கைவிரித்து விட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
5. டாக்டராக வேண்டும் என்ற எனது கனவுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி ஊக்கம் அளித்தது- ‘நீட்’ தேர்வில் சாதனை படைத்த மாணவர் ஜீவித்குமார் நெகிழ்ச்சி
டாக்டராக வேண்டும் என்ற எனது கனவுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி ஊக்கம் அளித்ததாக ‘நீட்’ தேர்வில் சாதனை படைத்த தேனி மாணவர் ஜீவித்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.