நீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிட்ட புகைப்படங்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை - ஆதார் ஆணையம் பதில்
நீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிட்ட புகைப்படங்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் பதில் அளித்துள்ளது.
சென்னை,
நீட் தேர்வில் மோசடி செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக 2 வழக்குகள் சிபிசிஐடி விசாரணையில் உள்ளன. மோசடி செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் என சுமார் 15 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 10 பேரின் புகைப்படங்களை கடந்த பிப்ரவரி மாதம் சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். புகைப்படத்தை வைத்து அவர்களின் விவரங்களை கொடுக்குமாறு ஆதார் ஆணையத்திற்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் நீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிட்ட புகைப்படங்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் பதில் அளித்துள்ளது.
இதனால் நீட் தேர்வில் மோசடி செய்து மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story