கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கியை காட்டி விரட்டியடிப்பதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கியை காட்டி விரட்டியடிப்பதா என்று டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
வங்க கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிங்கள கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டியடித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலால் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினர் அத்துமீறல் சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. தமிழக மீனவர்கள் வங்க கடலில் நிம்மதியாக மீன் பிடிப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story