அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான புகார் மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான, சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் புகார் மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டியது ஆளுநரின் கட்டாயம். விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
முதல்வருடன் ஸ்டாலின் சந்திப்பில் உள்நோக்கம் கிடையாது. இது ஒரு அரசியல் நாகரிகம். கட்சத்தீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான, சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் புகார் மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story