வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு


வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
x
தினத்தந்தி 20 Oct 2020 7:10 AM GMT (Updated: 20 Oct 2020 7:10 AM GMT)

வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலமாக கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

சென்னை :

ஆந்திரா, கர்நாடகாவில் தொடர்ந்து  மழை பெய்து வருவதால்.அங்கு இருந்து வரும் வெங்காயத்தின் வரவு குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. ரூ. 80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை மேலும் 20 முதல் 30 வரை உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில், வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், கூட்டுறவு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலமாக நாளை முதல் சென்னையிலும், நாளை மறுநாள் முதல் மற்ற மாவட்டங்களிலும் கிலோ 45 ரூபாய்க்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயம் பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story