அக்டோபர் 21: இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்


அக்டோபர் 21: இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 21 Oct 2020 1:40 AM GMT (Updated: 21 Oct 2020 1:40 AM GMT)

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய் என விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்தநிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 30வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் 20வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

சென்னையில் 30ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், 20 வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Next Story