இன்று முதல் வெங்காயம் ரூ.45க்கு விற்பனை: அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்


இன்று முதல் வெங்காயம் ரூ.45க்கு விற்பனை: அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Oct 2020 4:55 AM GMT (Updated: 21 Oct 2020 4:55 AM GMT)

பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கான விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

சென்னை, 

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்யும் மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் லாரி, லாரியாக காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை ‘கிடு கிடு’வென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கான விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக சென்னையில் இன்றும், தமிழகம் முழுவதும் நாளை முதல் விற்பனை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story