ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு + "||" + Schools to open in Andhra Pradesh on November 2 - Chief Minister Jagan Mohan Reddy announcement
ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 2 முதல் ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்று நாட்களில் பாடம் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் வரை தினசரி 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது ஆந்திராவில் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினர். அப்போது, ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்று நாட்களில் பாடம் நடத்தப்பட வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தினார். பள்ளியில் 750க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் காலையில் மட்டுமே செயல்படும் என்றும், ஆனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஷிப்ட் முறை வகுப்புகள் நவம்பர் மாதத்திற்கு மட்டும் செயல்படுத்தப்படும் என்றும், நிலைமையை பொறுத்து டிசம்பர் மாதத்திற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் ஆந்திர முதல்வர் கூறியுள்ளார்.