தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு


தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2020 12:49 PM GMT (Updated: 21 Oct 2020 12:49 PM GMT)

தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,97,116 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகம் முழுவதும் 39 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,780 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 845 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,92,527 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் 159 பேர், காஞ்சிபுரத்தில் 106 பேர், திருவள்ளூரில் 180 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர அதிகபட்சமாக கோவையில் 314 பேருக்கும், சேலத்தில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் இன்று 4,301 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,50,856 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 35,480 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 81,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 91.93 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story