மாநில செய்திகள்

பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு + "||" + Chief Minister Palanisamy orders to open water from Balaru and Porundalaru dams

பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறுஅணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 25.10.2020 முதல் 3.3.2021 முடிய 130 நாட்களுக்கு விநாடிக்கு 20 கன அடி வீதம் மொத்தம் 224.64 மி.க. அடிக்கு மிகாமல் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். 

இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.