மாநில செய்திகள்

நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற பிரார்த்திக்கிறேன் - அமித்ஷாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து + "||" + I pray to serve the country in good health for a long time - Chief Minister Palanisamy congratulates Amit Shah

நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற பிரார்த்திக்கிறேன் - அமித்ஷாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற பிரார்த்திக்கிறேன் - அமித்ஷாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, 

.மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்துடன் அவருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், “உங்கள் பிறந்தநாளில் எனது வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.