விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ரூ.100 கோடி மதிப்பில் விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக உள்ளது என்றும், 55 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், விராலிமலையில் அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியின் போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “புதுக்கோட்டை மக்களின் எதிர்ப்பார்ப்பான காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கடந்தாண்டு மட்டும் புதுக்கோட்டையில் 110 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பிரதிபலிக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சிலை அமைக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story