எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி + "||" + Electricity Board will not be privatized under any circumstances - Minister Thangamani
எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது என்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ஆனங்கூரில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், “மின்சாரத்துறை தனியார்மயம் ஆக்கப்படுமா?” என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி. “எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது” என்று கூறினார். மேலும் இது குறித்து மின்சார வாரிய தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம் என்று கூறிய அவர் யாருடைய தவறான பிரச்சாரத்தையும் தொழிலாளர்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.