மாநில செய்திகள்

காவிரி டெல்டாவில் சாகுபடி பரப்பளவு உயர்வு - வேளாண் துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தகவல் + "||" + Cultivation area increases in Cauvery delta - Agriculture Secretary Gagandeep Singh Bedi

காவிரி டெல்டாவில் சாகுபடி பரப்பளவு உயர்வு - வேளாண் துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தகவல்

காவிரி டெல்டாவில் சாகுபடி பரப்பளவு உயர்வு - வேளாண் துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தகவல்
காவிரி டெல்டாவில் சாகுபடி பரப்பளவு உயர்ந்துள்ளதாக வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தெரிவித்துள்ளார்.
சிதம்பரம்,

தமிழக அரசின் வேளாண்மைத்துறை செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ககந்தீப்சிங்பேடி, சிதம்பரம் பகுதியில் பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 43 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை அவர் ஆய்வு செய்தார்.


இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், காவிரி டெல்டாவில் சாகுபடி பரப்பளவு 2 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் இருந்து 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல் தமிழகத்தில் தற்போது சம்பா சாகுபடி 6 லட்சம் ஹெக்டேர்களுக்கு மேல் உள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காவிரி டெல்டாவில், கன மழைக்கு கணவன்-மனைவி உள்பட 4 பேர் பலி
காவிரி டெல்டாவில், கனமழைக்கு வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் கணவன்-மனைவி உள்பட 4 பேர் பலியானார்கள்.