மாநில செய்திகள்

மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றம் + "||" + Change of Electricity Board Website Addresses

மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றம்

மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றம்
மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக வசதி காரணமாக வலைதளங்களின் டொமைன் பெயர்கள் (Domain name) மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக .gov என்று பயன்படுத்தப்பட்டு வந்த வலைதள முகவரிகள் தற்போது .org என்று மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் tangedgo.org, tantransco.org மற்றும் tnebltd.org என்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.