மாநில செய்திகள்

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு + "||" + Increase in wind power generation in Tamil Nadu

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள சுமார் 25 ஆயிரம் காற்றாலைகளில் சுமார் 10 ஆயிரம் காற்றாலைகள் தமிழகத்தில் தான் உள்ளன.

தமிழகத்தின் மின் தேவையை அனல், நீர், காற்று மற்றும் அணு மின்சாரம் பூர்த்தி செய்கின்றன. காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின்சாரம் கிடைக்கிறது. வழக்கமாக மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தி ஆகும்.

ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றாலை மின்சாரம் உற்பத்தி உயர்ந்து உள்ளது. அதாவது, 2019-ம் ஆண்டை பொறுத்தமட்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 9,189 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டு 9,236 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடக்கம்: அனைத்து கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
2. தமிழகத்தில் வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை 15% குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை 15% குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் இன்று புதிதாக 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
4. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு நாளை மறுதினம் வருகை
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்திற்கு வருகின்றனர்.
5. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.