மாநில செய்திகள்

ஆரணியில் மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள் + "||" + For brides in Arani Friends who gifted onions

ஆரணியில் மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள்

ஆரணியில் மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள்
ஆரணியில் மணமக்களுக்கு வெங்காயததை பரிசாக மணமகளின் தோழிகள் அளித்தனர்.
பெரியபாளையம்,

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் ஷீபா சுவிதா. பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.ஆரணியை சேர்ந்த என்ஜினீயர் செந்தில்குமாருக்கும், ஷீபா சுவிதாவிற்கும் திருமணம் நடைபெற்று வரவேற்பு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணியில் நடைபெற்றது.


இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த மணமகளின் தோழிகள் வெங்காய தொகுப்பு பையை மணமக்களுக்கு திருமண பரிசாக அளித்தனர். வெங்காயம் விலை திடீரென கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ள நிலையில் 5 கிலோ வெங்காயத்தை பூச்செண்டு போல அலங்கரித்து மணப்பெண்ணின் தோழிகள் மணமேடைக்கு கொண்டு வந்து திருமண பரிசாக அளித்தனர்.

வெங்காயத்தை திருமண பரிசாக தோழிகள் அளித்தது திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மணமக்களுக்கு திருமண பரிசாக வெங்காயம் அளிக்கப்பட்ட காட்சி சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகிறது.