மாநில செய்திகள்

தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை + "||" + Intensive treatment of Tamil Nadu Minister Durakkannu

தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை

தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை,

தமிழக வேளாண் துறை அமைச்சர்  துரைக்கண்ணு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அவருக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் துரைக்கண்ணு இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.