பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை தான் அவசியம், மனுதர்மம் தேவையில்லை - பா.ஜனதா தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன்


பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை தான் அவசியம், மனுதர்மம் தேவையில்லை - பா.ஜனதா தேசிய மகளிரணித்  தலைவர் வானதி சீனிவாசன்
x
தினத்தந்தி 29 Oct 2020 1:16 PM IST (Updated: 29 Oct 2020 1:16 PM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரமாக நடமாடுவதற்கு சமுதாயம் , பாதுகாப்பு போன்றவையே தேவை. இது தான் பெண்களுக்கு அவசியமே தவிர , மனுதர்மம் அவசியமில்லை என பா.ஜனதா தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன்.

கோவை

பா.ஜனதா மகளிரணி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் , கோவை தொண்டாமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இருந்து கிராம பின்னணி கொண்ட விவசாயியின் மகளுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் பதவியை கொடுத்து இருக்கின்றது. அர்ப்பணிப்புடன் பணி செய்தால் பொறுப்புகள் வந்து சேரும் என்பதற்கு தனக்கு பொறுப்பு வழங்கப்பட்டது உதாரணம்.

தேசிய பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் தமிழகத்தில் பா.ஜனதாவை வளர்ப்பது பிரதானமாக இருக்கும். தேசிய பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கின்றேன்.

தேசிய பொறுப்பு என்றால் இந்தி தெரிந்து இருக்க வேண்டும், வடக்கத்திய கட்சி, குறிப்பிட்ட சாதிக்கான  கட்சி என்ற தவறாக பிறர்  சொல்லுகின்ற நிலையில் எனக்கு இந்த பதவியை வழங்கி கட்சி  அங்கீகாரம் கொடுத்து இருக்கின்றது.

மனுதர்மம் என்பது பெண்களை இழிவுபடுத்துகின்றது,  பா.ஜனதா மனுதர்மத்தை  பின்பற்றுகின்றதா என்று விடுதலை சிறுத்தைகள் உட்பட  அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்கின்றனர் எனவும் , தமிழகத்தில் சாதாரண கிராமத்தில் பிறந்த பெண்மணிக்கு பா.ஜனதா அங்கீகாரம் கொடுக்கின்றது, இதில் மனுதர்மம் எங்கு வருகின்றது? என கேள்வி எழுப்பினார். 

ஏதோ நூலில் யாரோ சொல்வதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை,  திருமாவளவன் அரசியலுக்காக  மனுதர்ம நூலை வைத்து பேசுகின்றார். பெண்கள் குறித்து காலத்திற்கு ஓவ்வாமல் எழுதி வைத்து இருப்பது  பெண்களுக்கு தேவையில்லை எனவும், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரமாக நடமாடுவதற்கு சமுதாயம் ,  பாதுகாப்பு போன்றவையே தேவை. இது தான் பெண்களுக்கு அவசியமே தவிர , மனுதர்மம் அவசியமில்லை எனவும், மனுதர்மத்தை அரசியலுக்காக திருமாவளவன் பயன்படுத்துகின்றார் எனவும்  தெரிவித்தார்.


Next Story