தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு மீனவர்கள் கண்டனம்


தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு மீனவர்கள் கண்டனம்
x

தமிழக மீனவர்கள் குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் கூறிய கருத்துக்கு மீனவ சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம்,

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மீனவ சங்கத் தலைவர் எமரிட் பேசுகையில், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதை ஊக்குவிக்கும் வகையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழக மீனவர்கள் இலங்கை பகுதிக்கு சென்று மீன் பிடிப்பதும், இலங்கை மீனவர்கள் தமிழக பகுதிகளில் மீன் பிடிப்பதும் தவிர்க்க முடியாதவை ஆகும். இது குறித்து மேலும் இரு நாட்டு மீனவர்களுக்கும் பிரச்சினை ஏற்படாத வகையில் பேசித் தீர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story