தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு இ-பாஸ் இன்றி பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி
தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. எனினும், அண்டை மாநிலங்களுக்கான பேருந்து சேவை தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், புதுச்சேரி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே இ பாஸ் இன்றி பேருந்துகள் இயங்கலாம் எனவும் தனியார் பேருந்துகளுக்கும் அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Related Tags :
Next Story