அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி


அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 1 Nov 2020 1:09 PM IST (Updated: 1 Nov 2020 1:09 PM IST)
t-max-icont-min-icon

தமிழின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

1953ம் ஆண்டு மத்திய அரசால் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து 1956ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய மெட்ராஸ் உருவானது. பின்னர் 1968ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு தினம் என தமிழக அரசு கொண்டாடிவருகிறது. 

இந்நிலையில் தமிழின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில், “ செந்தமிழாம் தாய்மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு எனும் பெயர் பெற்ற இந்த நன்னாளில், தமிழின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய தமிழ்நாடு தின நல்வாழ்த்துக்களை பேரன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.



Next Story