அமைச்சர் துரைக்கண்ணு இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி
அமைச்சர் துரைக்கண்ணு இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராஜகிரி,
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவபடத்தின் முன் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு புறப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியில் அமைச்சருக்கு இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு வந்தடைந்தது. அமைச்சர் துரைக்கண்ணுவின் இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து மறைந்த அமைச்சரின் உடல் தஞ்சை ராஜகிரியில் உள்ள மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story