தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஆலோசனை


தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 2 Nov 2020 10:49 AM IST (Updated: 2 Nov 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

சென்னை,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்தநிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகள் வரும் 16ம் தேதி முதல் செயல்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

9,10,11 மற்றும் 12ம் வகுப்புகள் வரும் 16-ம்தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும், பள்ளி, கல்லுரி பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். 

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க இரண்டு வார காலம் அவகாசம் உள்ள நிலையில் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இரு துறைகளின் அமைச்சர்களும் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர் 

வகுப்பறைகளில் கிருமிநாசினியை தெளித்து சுத்தப்படுத்துதல், மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story