ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு


ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு
x
தினத்தந்தி 2 Nov 2020 11:44 AM IST (Updated: 2 Nov 2020 11:53 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை, 

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து வருவதால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க கோரியும், அதனை அவசர வழக்காக விசாரிக்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.  ஆனால் முறையீட்டுக்கு பதில், மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். 

Next Story