தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2020 1:56 PM IST (Updated: 2 Nov 2020 1:56 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகின்றது. இதனால் நீர் ஆதாரமான ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மற்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story