வரதமாநதி அணையிலிருந்து நவம்பர் 6-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
வரதமாநதி அணையிலிருந்து நவம்பர் 6-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதமாநதி அணையிலிருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, வரதமாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக நவம்பர் 6 முதல் 120 நாட்களுக்கு பழனி வட்டம், பாப்பன்கால்வாய், பெரிய வாய்க்கால், பழனி வாய்க்கால் மற்றும் 18 பாசன குளங்களின் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 5523.18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'.
இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story