கொரோனா தடுப்பு பணிகள் குறித்து குறித்து வரும் 6 ஆம் தேதி நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு


கொரோனா தடுப்பு பணிகள் குறித்து குறித்து வரும் 6 ஆம் தேதி நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு
x
தினத்தந்தி 2 Nov 2020 6:22 PM IST (Updated: 2 Nov 2020 6:22 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து குறித்து வரும் 6 ஆம் தேதி நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். 

இதுவரை கிட்டத்தட்ட 20 மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் நிதி அளித்து வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து வரும் 6 ஆம் தேதி நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

Next Story