பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போகிறதா? - அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்


பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போகிறதா? - அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்
x
தினத்தந்தி 3 Nov 2020 9:54 AM IST (Updated: 3 Nov 2020 9:54 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரிகள் திறப்பினை தள்ளி வைப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்தநிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என கருத்துக்கள் எதிரொலியால், பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, 

இதுதொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாகவும், கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story