மருத்துவ படிப்பு சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) கலந்தாய்வில் பங்கேற்க இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் 12ஆம் தேதி வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் 16-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 18-ம் தேதி முதல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story