தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2-வது அலை உருவாகாமல் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2-வது அலை உருவாகாமல் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. தற்போது 3.5 சதவீதம் அளவிற்கு பாசிட்டிவிட்டி எண்ணிக்கை உள்ளது. தமிழகத்தில் 4.39 லட்சம் காய்ச்சல் முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனை முடிவுகளை வேகமாக அளிக்கும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
ஒரு கோடி ஆர்டி பிசிஆர் கருவிகளை வாங்கி பயன்படுத்தி தமிழகம் முன்னோடியாக உள்ளது.தமிழகத்தில் 213 பரிசோதனை மையங்கள் மூலமாக ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 80 சதவீத பரிசோதனைகள் அரசு ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முகக்கவசம் அணியாத 10 லட்சம் பேருக்கு ரூ.8 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனா பாதிப்பின் 2-வது தாக்கத்தில் இருந்து மீள இயலாத நிலையில் தமிழகம் மீண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2ம் அலை உருவாகாமல் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம். 3.34 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தொற்று அதிகம் பரவ பண்டிகை காலம் காரணமாகிவிட கூடாது என்பதில் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Related Tags :
Next Story