பருவமழை தீவிரம்: தமிழகத்திற்கு ‘மஞ்சள் அலர்ட்’ - இந்திய வானிலை ஆய்வு மையம்
பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்திற்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்ச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
கனமழை காரணமாக தமிழகத்திற்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்ச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ வடகிழக்கு பருவ மழை வலுப்பெற்றதன் காரணமாகவும் தமிழகம் மற்றும் கேரளாவில் மழை தீவிரமடைய தொடங்கி உள்ளது,
மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
அதே போன்று வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கும், கேரளாவில் வரும் 6-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. அடுத்த ஐந்து தினங்களுக்கு நாட்டின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று அதில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story