பள்ளிகள் திறப்பு குறித்து 9ஆம் தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும்
பள்ளிகள் திறப்பு குறித்து 9ஆம் தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. அதன் பின்னர், கொரோனா தாக்கம் சற்று குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருப்பினும், பள்ளிகள், கல்லூரிகள் திறப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதையடுத்து நவம்பர் மாதம் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதில் பள்ளிகள், கல்லூரிகள் வருகிற 16-ந் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. பள்ளிகளை பொறுத்தவரையில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து பெற்றோரிடம் வருகிற 9-ந் தேதி கருத்து கேட்புகூட்டம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து 9ஆம் தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து 9ஆம் தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் அறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பத்தை அளவீடு செய்ய வேண்டும். அதிகமான பெற்றோர் வந்தால் சுழற்சி முறையில் வெவ்வேறு நேரங்களில் வரவழைத்து கருத்து கேட்க வேண்டும்.
மேலும் பள்ளிகளில் சுத்தம் செய்யவும், கிருமி நாசினிக்கும் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும் 6000 அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கிருமி நாசினிகள் எங்கே? என்றும் ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Related Tags :
Next Story