மக்கள் நலன் ஒன்றையே இலக்காக கொண்டு அதிமுக அரசு செயல்படும் - துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம்
மக்கள் நலன் ஒன்றையே இலக்காக கொண்டு அதிமுக அரசு செயல்படும் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படும் என்று கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். இந்த நிலையில் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் தொடர்ந்து செயல்பட்டுவரும் அம்மாவின் அரசும், தற்போது இளைஞர்களின் வாழ்வை சீர்குலைக்கும் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய முடிவெடுத்துள்ளது. என்றுமே தமிழக மக்கள் நலன் ஒன்றையே இலக்காக கொண்டு செயல்படும் ஒரே அரசு அம்மாவின் அரசு மட்டுமே.
தமிழகத்தில் சாமானியமக்களின் உழைப்பை சுரண்டிய லாட்டரிசீட்டு முறையை 2003ல் அதிரடியாக தடைசெய்து பாமரமக்களை காப்பாற்றியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். அதன்பின் ஆட்சியில் அமர்ந்த திமுக தடைசெய்யப்பட்ட லாட்டரி முறையை சுயலாபத்திற்காக மீண்டும் கொண்டுவர எடுத்த முயற்சிகளை மக்கள் மறக்க மாட்டர்.
இவ்வாறு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் தொடர்ந்து செயல்பட்டுவரும் அம்மாவின் அரசும், தற்போது இளைஞர்களின் வாழ்வை சீர்குலைக்கும் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய முடிவெடுத்துள்ளது. என்றுமே தமிழக மக்கள் நலன் ஒன்றையே இலக்காக கொண்டு செயல்படும் ஒரே அரசு அம்மாவின் அரசு மட்டுமே!
— O Panneerselvam (@OfficeOfOPS) November 5, 2020
தமிழகத்தில் சாமானியமக்களின் உழைப்பை சுரண்டிய லாட்டரிசீட்டு முறையை 2003ல் அதிரடியாக தடைசெய்து பாமரமக்களை காப்பாற்றியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். அதன்பின் ஆட்சியில் அமர்ந்த திமுக தடைசெய்யப்பட்ட லாட்டரி முறையை சுயலாபத்திற்காக மீண்டும் கொண்டுவர எடுத்த முயற்சிகளை மக்கள் மறக்க மாட்டர்
— O Panneerselvam (@OfficeOfOPS) November 5, 2020
Related Tags :
Next Story