கமல் ஹாசன் பிறந்த நாள்; வாழ்த்து தெரிவிக்க தொண்டர்கள் குவிந்தனர்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டின் முன்பு இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை,
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 66-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டனர்.
திறந்த வேனில் நின்றபடி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை கமல் சந்தித்தார். அப்போது அவரை வாழ்த்தி ரசிகர்கள் முழக்கமிட்டனர். அவர்களின் வாழ்த்துக்களை கை கூப்பி ஏற்றுக்கொண்ட கமல், அவர்களுக்கும் தனது வாழ்த்துக்ளை தெரிவித்தார்.
Related Tags :
Next Story