இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
இறுதி செமஸ்டர் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு ஆன்லைனில் மறுதேர்வு நடைபெறும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
'இறுதி செமஸ்டர் தேர்வை தொழில்நுட்ப காரணங்களால் எழுத முடியாமல் போனவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும். வரும் நவம்பர் 17-ஆம் தேதி முதல் நவம்பர் 21- ஆம் தேதி வரை ஆன்லைனில் மறுதேர்வு நடைபெறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தொழில்நுட்பகோளாறு போன்ற காரணங்களால் பலர் எழுத முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story