வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடக்கும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்


வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடக்கும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
x
தினத்தந்தி 7 Nov 2020 5:29 PM IST (Updated: 7 Nov 2020 5:29 PM IST)
t-max-icont-min-icon

வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

வேல்யாத்திரைக்கு தடை விதித்த தமிழக டிஜிபியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இன்று மாலை இந்த அவரச மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலை காரணம் காட்டி அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும், பாஜகவுக்கு தமிழக அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Next Story