மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக மேலும் 2,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + 2,341 new cases of corona infection confirmed in Tamil Nadu

தமிழகத்தில் புதிதாக மேலும் 2,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் புதிதாக மேலும் 2,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 15-வது நாளாக 3 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு தொடர்ந்து 15வது  நாளாக 3 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது. 

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 2,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,41,488 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 25 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,324 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 2,352 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,11,198 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 18,966 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்ட்ங்களில் 1,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,341 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் - தலைமை செயலாளர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
3. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் 41 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்
தமிழகத்தில் இதுவரை 41 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.