வேல்யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
வேல்யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி எம்.சத்தியநாராயணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் முழு விவரங்களுடன் காவல் துறைக்கு கூடுதல் விண்ணப்பம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Related Tags :
Next Story